தென் கொரியாவுடனான இனி பேச்சுவார்த்தை இல்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது.

"தென் கொரியாவின் முற்றிலும் தவறான நடவடிக்கைகளே" இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறிவுக்கு காரணம் என்றும் வட கொரியா கூறியுள்ளது.

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரைக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில்தான் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வட கொரியா தனது இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆறாவது பரிசோதனையாக இது கருதப்படுகிறது.

வட கொரியா சுமார் ஆறு நாட்களுக்கு முன்பு, இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடல் பகுதியை நோக்கி ஏவியது.

கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதமற்ற நிலையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே கடந்த ஜூன் மாதம் நடந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர் ஏவுகணை பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

'5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு'

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்ட பிரதமர் நரேந்திர மோதி, தன்னுடைய சுதந்திர தின உரையில் தம்முடைய அரசு எடுத்த முக்கிய முடிவுகள், தேசம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தாம் முன்வைக்கும் தீர்வுகள் ஆகியவை குறித்து விளக்கியிருக்கிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள், தீர்வுகள் எத்தகையவை?

பிரதமர் நரேந்திர மோதியின் நேற்றைய உரையில் விஷயங்களில் நான்கைந்து, மிக முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்பட்டன.

முதலாவதாக, பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.

விரிவாக படிக்க:நரேந்திர மோதி: '5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' - எப்படி சாத்தியம்?

இந்தியாவில் தேடப்படும் மத போதகரால் மலேசியாவில் கொந்தளிப்பு

ஜாகிர் நாயக். இந்தப் பெயர்தான் மலேசிய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறுகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாக ஒட்டுமொத்த நாடும் இவரைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கிறது.

பல்லின மக்கள் வாழக்கூடிய மலேசியாவில், ஒரு தனி மனிதரால், அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரது பேச்சால் கொந்தளிப்பான சூழல் ஏற்படும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

தற்போது ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவர் இனிமேலும் இங்கு தங்கி இருந்தால், மலேசிய நாட்டில் மத மற்றும் இன நல்லிணக்கத்துக்கு கேடு விளையும் என்பதே ஜாகிர் எதிர்ப்பாளர்களின் வாதம்.

விரிவாக படிக்க:ஜாகிர் நாயக்: இந்திய மத போதகரால் மலேசியாவில் கொந்தளிப்பு

Once Upon a time in Hollywood - சினிமா விமர்சனம்

ஹாலிவுட்டின் பொற்காலம் எனக் கருதப்படும் 1960களின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. ரிக் டால்டன் (லெனார்டோ டி காப்ரியோ) ஒரு தொலைக்காட்சி நடிகர். சண்டைக் கலைஞரான க்ளிப் பூத் (பிராட் பிட்) ரிக் டால்டனுக்கு டூப்பாக நடிப்பவர். இருவரும் நண்பர்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் ரிக்கிற்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கின்றன. அந்தத் தருணத்தில் ஒரு கௌபாய் வில்லன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது.

அதில் முதலில் சொதப்பும் ரிக், பிறகு பிரமாதமாக நடிக்கிறான். இதற்குப் பிறகு இத்தாலிக்குச் சென்று சில மேற்கத்திய சாகசங்களில் நடித்துவிட்டு ரிக்கும் க்ளிஃபும் அமெரிக்கா திரும்புகிறார்கள்.

விரிவாக படிக்க:Once Upon a time in Hollywood - சினிமா விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம்

இந்திய சுதந்திர தினத்தின் 73வது ஆண்டு நிகழ்வில் டெல்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.

பகட்டான ஆடை இல்லாமல் வெள்ளை நிற அரை கை குர்தா அணிந்திருந்தார். இந்திய பிரதமராக, நரேந்திர மோதிக்கு இது ஆறாவது சுதந்திர தின நிகழ்வு.

சரி, இதற்கு முந்தைய சுதந்திர நிகழ்வுகளில் மோதி என்ன மாதிரியான நிறம் மற்றும் வடிவங்களில் தலைப்பாகை அணிந்திருந்தார் என பார்ப்போம்.

விரிவாக படிக்க:தொட்டுத் தொடரும் நரேந்திர மோதியின் தலைப்பாகை பாரம்பரியம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: